சென்னையில் மீண்டும் மதுக்கடைகள்
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், சென்னை  மற்றும் புறநகர்களைத் தவிரத் தமிழ்நாட்டில் ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன.    (கட்டுப்பாடு பகுதிகள் விதி விலக்கு)
எனினும் டாஸ்மாக் மூலமாகக் கிடைக்கும் மொத்த வருவாயில் 25 % பணத்தைச் சுளையாக அள்ளித்தரும் சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள சுமார் 900 டாஸ்மாக்  கடைகள் திறக்கப்படாததால், அரசுக்கு எதிர் பார்த்த வருமானம் கிட்டவில்லை..
சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால், இங்குள்ள டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு தயக்கம் காட்டி வந்தது.
எனினும், சென்னை காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட 200 கடைகள் வரும் 8 ஆம் தேதி திறக்கப்படலாம் எனச் செய்திகள் இறக்கை கட்டி பறக்கின்றன.
ஆனால் இந்த செய்திகளை டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ஆர்.கிர்லோஷ் குமார் மறுத்துள்ளார்.
‘’ சென்னையில் மதுபான கடைகளைத் திறப்பது இல்லை என்று அரசு தெளிவாக ஆணை பிறப்பித்துள்ளது’’ என்கிறார், அவர்.
எனினும் முடிவு செய்யும் இடத்தில் கிர்லோஷ் குமார் இல்லை என்பதால், சென்னை  குடிமகன்களுக்கு இனிப்பான தகவல்கள் விரைவில் வரலாம்.