ஜெர்மன்:
கால்பந்தாட்ட உலகின் மாயமான் மெஸ்ஸி கிளப் அணிகளுக்காக 700 கோல்களை பதிவு செய்து மெஸ்ஸி புதிய சாதனை படைத்துள்ளார்.

நேற்று பிஎஸ்ஜி கிளப் அணிக்காக, Olympique de Marseille அணிக்கு எதிரான ஆட்டத்தில் 29-வது நிமிடத்தில் அவர் கோல் பதிவு செய்தார். அது கிளப் அணிகளுக்காக அவர் பதிவு செய்த 700-வது கோல் ஆகும். இது அவரது விளையாட்டு உலக சாதனைகளில் புதிய சாதனையாக அமைந்துள்ளது.
இதற்கு முன்னர் கால்பந்தாட்ட உலகில் 700 கோல்களை கிளப் அணிகளுக்காக போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ பதிவு செய்திருந்தார். இப்போது அந்த வரிசையில் இரண்டாவது வீரராக மெஸ்ஸி இணைந்துள்ளார். இந்தப் போட்டியில் பிஎஸ்ஜி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
Patrikai.com official YouTube Channel