வாஷிங்டன்
டிவிட்டரின் புதிய தலைமை அதிகாரியாக அமெரிக்காவைச் சேர்ந்த லிண்டா யாக்கரினோ பொறுப்பு ஏற்கிறார்.
எலான் மஸ்க் சென்ற ஆண்டு டிவிட்டர் நிறுவனத்தை வாங்கி இருந்தார் பொதுவால பயனர்கள் தங்களது கருத்துகளை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் டிவிட்டர் தளத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அவர் செய்தார். குறிப்பாக பயனர்களுக்கு சந்தா கட்டணம் தொடங்கி ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது என அவரது நடவடிக்கைகள் நீண்டன.
தற்போது எலான் மஸ்க், “டிவிட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோவை வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இவர் இனி ட்விட்டரின் பிசினெஸ் நடவடிக்கைகளில் லிண்டா கவனம் செலுத்துவார். தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பத்தில் நான் கவனம் செலுத்துவேன். ” என்று தெரிவித்துள்ளார்.
சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக லிண்டா யாக்காரினோ NBC Universal நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் அந்நிறுவனத்தின் விளம்பர செயல்திறனை அளவிடுவதற்கான ஒரு தொழில்துறை வழக்குரைஞராக இருந்து வந்துள்ளார். அந்நிறுவனத்தின் விளம்பர விற்பனையின் தலைவராகவும் இருந்துள்ளார்.
யாக்காரினோ, டர்னர் என்டர்டெயின்மென்ட்டில் 19 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அவர் பென்சில்வேனியா பல்கலைக்கழக முன்னாள் மாணவர். தாராளவாத கலைகள் மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் பட்டம் பெற்றுள்ளார்.