டெல்லி:
இன்று ரிங் ஆஃப் ஃபயர் எனப்படும் சூரிய கிரகணம் நடைபெற்ற நிலையில், துரதிருஷ்டவசமாக அதை தன்னால் பார்க்க முடியவில்லை என்று பிரதமர் மோடி டிவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்தை நிகழ்ந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம், குறிப்பாக தென்னிந்தியா உள்பட இந்தியாவின் பல பகுதிகளிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் தெரிந்தது. மக்கள் சூரிய கிரகணத்தை கண்டு ரசித்த நிலையில் பிரதமர் மோடி, தானும் கிரகணத்தை காண முயற்சி செய்தாகவும், ஆனால், மேகங்களினால், தன்னால் காண முடியவில்லை என்று கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், பல இந்தியர்களைப் போலவே, நான் solareclipse2019 பற்றி ஆர்வமாக இருந்தேன். துரதிர்ஷ்டவசமாக, மேக மூட்டம் காரணமாக என்னால் சூரியனைப் பார்க்க முடியவில்லை, ஆனால் கோழிக்கோடு கிரகணத்தின் காட்சிகளையும் நேரடி ஸ்ட்ரீமில் பிற பகுதிகளையும் பார்த்தேன்… இதுகுறித்த நிபுணர்களுடன் தொடர்புகொண்டு தனது அறிவை வளப்படுத்திக் கொண்டேன் என்று தெரிவித்து உள்ளார்.
இந்த ஆண்டின் 2வது மற்றும் கடைசி கிரகணம் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி காலை 11 மணி வரை நீடித்தது. இதை காண அறிவியலாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பெரும் ஆர்வம் கொண்டிருந்தனர்.
கிரகணம் இன்று முதன்முதலாக வடக்கு கேரளாவின் செருவதூரில் தெரிய வந்தது. அங்க “நெருப்பு வளையமாக சூரியன் தெரிந்தது. அதுபோல நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல நிறங்களில் கிரகணம் தென்பட்டது.
இந்த கிரகணம் வட இலங்கைக்கான வங்காள விரிகுடா பகுதி, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு வழியாக தென்னிந்திய தீபகற்பம் மற்றும், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமான், இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், வடக்கு மரியானா தீவுகள் மற்றும் குவாம் ஆகிய நாடுகளிலும் தெரிந்ததாக கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]