விஜய் டிவி ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் மூலம் பிரபலமானவர் கவின். இதையடுத்து ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.
இந்நிலையில் ஈகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. வினீத் இயக்கத்தில் உருவாகும் ‘லிப்ட்’ படத்தில் நடிகர் கவின் நாயகனாக நடிக்கிறார். இதில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார்.
லிஃப்ட் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், டப்பிங் முடிவடைந்திருப்பதாக கவின் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
த்ரில்லர் கதையம்சம் கொண்ட இத்திரைப்படம், திரையரங்குகள் திறந்த பின்னர் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்பட்டது.
வெகுநாட்களாக இப்படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் ட்ரெய்லர் ரிலீஸ் பற்றி தற்போது தயாரிப்பாளர் ரவீந்திர் சந்திரசேகர் மனம் திறந்துள்ளார். இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தினால் மிகவும் அமைதியாக இருப்பதாகவும், திரையரங்குகள் திறக்க தாமதமானால் இப்போது வெளியாகும் பாடலும் டிரெய்லரும் பழையதாகி விடும் என்ற காரணத்தினாலும் இன்னும் எதையும் வெளியிடாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் “மிரட்டலான ட்ரைலர் தயாராக இருக்கிறது. ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. எனவே எங்கள் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தாமதத்திற்கு ஏமாற்றங்களுக்கும் மன்னிக்கவும்…” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
We are quite coz of theatre not open and if delay is far then what ever we release now will become old. Can't wait seriously to show you all. Stunning trailer is ready. BIG INVITATION and surprise for fans waiting. Sorry for late disappointments. Hope you understand the business. https://t.co/AFkQ2cdBdI
— LIBRA Productions (@LIBRAProduc) July 18, 2021