லசேரி

கேரள கம்யூனிஸ்ட் நிர்வாகி கொலை வழக்கில் 9 ஆர் எஸ் எஸ் உறுப்பினர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள சுண்டா பகுதியை சேர்ந்த ரிஜித் சங்கரன் சிபிஐ(எம்)கட்சியின் நிர்வாகியாக இருந்தார். சிபிஎம் மற்றும் ஆர் எஸ் எஸ் இடையே அரசியல் பதற்றம் நிலவி வந்த நேரத்தில் கடந்த 2005ம் ஆண்டு அக்.3ம் தேதி அன்று ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களால் சுண்டா பகுதியிலுள்ள கோவிலின் அருகில் வைத்து ரிஜித் சங்கரன் கொல்லப்பட்டார்.

சிபிஎம் நிர்வாகி ரிஜித் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் கிணற்றுப் பகுதியில் ஆயுதங்களுடன் மறைந்திருந்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், ரிஜித்தின் நண்பர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர்

கடந்த 4ம் தேதி அன்று கொலை செய்ததாகக் கருதப்படும் நபர்கள் அனைவரும் குற்றவாளிகள் என தலசேரி மாவட்ட கூடுதல் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.  மொட்தம் 10 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில், ஒருவர் சாலை விபத்தில் இறந்துவிட்டார்.

நீதிமன்றம் குற்றவாளிகளான சுதாகரன் (57), ஜெயேஷ் (41), ரஞ்சித் (44), அஜீந்திரன் (51), ராஜேஷ் (46), ஸ்ரீ காந்த் (47), ஸ்ரீஜித் (43), பாஸ்கரன் (67) ஆகியோருக்கு கொலை, கொலை முயற்சி, கும்பலாக இணைந்து சட்டவிடோத நடவடிக்கையில் ஈடுபடுதல், கலவரம், ஆயுதங்களால் தாக்குதல் போன்ற பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.