பூமியின் காந்த சூழலையும், நமது கிரகம் சூரியனுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதையும் ஆய்வு செய்வதற்காக செப்டம்பர் 1964 இல் ஏர்பிட்டிங் ஜியோபிசிக்ஸ் அப்சர்வேட்டரி 1 விண்கலம் (ஓஜிஓ -1)  ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் 1969 வரை தரவுகளைச் சேகரித்தது. பின்னர் 1971 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக கைவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து மிக நீள்வட்டமான இரண்டு நாள் சுற்றுப்பாதையில் பூமியைச் அமைதியாக சுற்றி வந்தது. இப்பொது இதன் வாழ்நாள் முடிவுக்கு வந்துள்ளது.

புதிய தகவல்களின்படி, இது பூமியின் ஈர்ப்பு விசியில் சிக்கியுள்ளது. எனவே, இந்த வார இறுதியில் நமது கிரகத்தின் வளிமண்டலத்தில் நுழைந்து எரிந்து போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“OGO-1 அதன் அடுத்த மூன்று சுற்றுகளில் ஒன்றில் மீண்டும் வளிமண்டலத்திற்குள் நுழையும் என்று கணிக்கப்பட்டுள்ளது, எங்கள் தற்போதைய மதிப்பீடுகள் 2020 ஆகஸ்ட் 29, சனிக்கிழமையன்று OGO-1 பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைகின்றன. மாலை 5:10 மணியளவில் EDT [2110 GMT], தென் பசிபிக் வழியாக டஹிடிக்கும் குக் தீவுகளுக்கும் இடையில் ஏறக்குறைய பாதி வழியில் நுழையலாம்”என்று நாசா அதிகாரிகள் வியாழக்கிழமை (ஆக. 27) ஒரு உதிய அறிவிப்பை வெளியிட்டனர்.

“வளிமண்டலத்திற்குள் நுழையும் இந்த செயற்கைக் கோளால் பூமிக்கோ அல்லது பூமியில் உள்ள யாருக்கும் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. இது ஓய்வுபெற்ற விண்கலங்களுக்கான இயல்பான இறுதி செயல்பாட்டு நிகழ்வாகும்” என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

தெற்கு கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் NEO ஒருங்கிணைப்பு மையத்தில் உள்ள சிஎஸ்எஸ், பூமிக்கு அருகிலுள்ள பொருளின் மையம் (என்இஓ) ஆய்வாளர்களின் பகுப்பாய்வுகள், தற்போதைய கேள்விக்குரிய பொருள் ஒரு விண்கல் அல்ல, மாறாக ஓஜிஓ -1, நாசா அதிகாரிகள் தெரிவித்தனர்.

[youtube-feed feed=1]