ஜெனிவா: உலகளவில், காற்றில், பசுமை இல்ல வாயுக்கள் பெரியளவில் அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளது ஐ.நா. அமைப்பு.
இதன்மூலம், பருவநிலையில் பெரியளவில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும் அது எச்சரித்துள்ளது.
ஐ.நா. அமைப்பு கூறியுள்ளதாவது, “கடந்தாண்டைக் காட்டிலும், இந்தாண்டில், காற்றில் கலக்கும் பசுமை இல்ல வாயுக்களின் அளவு அதிகரித்துள்ளது. அதேசமயம், இந்த அளவு, அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரிக்கும்.
உலகெங்கிலும் உள்ள தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன் புகை காரணமாக, இப்படியான நிலை ஏற்படுகிறது” என்றுள்ளது அந்த அமைப்பு.
இந்நிலையில், பாரிஸ் ஒப்பந்தத்தில், அமெரிக்கா இணைய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது. அமெரிக்காவின் வெளியேறவுள்ள தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகினார்.
தற்போது ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அரசு ஆட்சி அமைத்ததும் முதல் வேலையாக பருவநிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.