சென்னை:  தமிழக சட்டப்பேரவைக்கு இன்று வந்த அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்ததுடன், சட்டையில்  ‘யார்  அந்த சார்’ என்ற பேட்ஜை அணிந்துள்ளதுடன்,  “டங்ஸ்டன் தடுப்போம்.. மேலூரைக் காப்போம்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட முக்கவசம் அணிந்து வந்திருந்தனர். இது பரபரப்பையும், மக்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது.

தமிழக சட்டபேரவையின் புத்தாண்டு கூட்டத்தொடரின் மூன்றாவதுநாள் அமர்வு இன்று தொடங்கி உள்ள நிலையில், பேரவைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள், கருப்பு சட்டை அணிந்துள்ளதுடன், தங்களது சட்டையில்,  ‘யார் அந்த சார் பேட்ஜ்   குத்தி உள்ளனர். அத்துடன், வெள்ள நிற முக்கவசத்தில் (மாஸ்க்) டங்ஸ்டன் தடுப்போம்.. மேலூரைக் காப்போம் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட  முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர்.

மதுரையில்  டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது தொடர்பாக மத்தியஅரசு அறிவித்த நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாட்டில் இரு பெரும் கட்சிகளான அதிமுக, திமுக அரசியல் செய்து வருகின்றன.  இதனால், அந்த திட்டத்தை தற்காலிக மத்தியஅரசு நிறுத்தி வைத்துள்ளது.  ஆனால், மக்கள் அந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நடைபெற்ற மாபெரும் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களை காவல்துறையினர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், இந்த விஷயத்தில், எதிரான மக்கள் போராட்டங்களை அடக்குமுறைகளால் ஒடுக்க முயல்வதாக தமிழக அரசைக் கண்டிக்கும் வகையில் “டங்ஸ்டன் தடுப்போம் மேலூர் காப்போம்” என்ற வாசகம் பொறித்த மாஸ்க் அணிந்து சட்டப்பேரவையில் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 6ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என கூறி, ஆளுநர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதையடுத்து சபாநாயகர் ஆளுநர் உரையை வாசித்தார். அத்துடன் சபை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், நேற்று இரண்டாவது நாள் அமர்வு கூடியது. அன்றைய அமர்வில் மறைந்த  பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ இவிகேஎஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது.

கடந்த 2 நாள் அமர்வில், அண்ணா பல்கலைக்கழகத்தில்  மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை முன்னிலைப்பத்தி  “யார் அந்த சார்?” என்ற வாசகத்துடன் கூடிய பேட்ச்களை அணிந்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.  இச்தசிலைளில், இன்றைய 3வது நாள் அமர்வில், கருப்பு சட்டையில், “யார் அந்த சார்?”  பேட்ஜ் உடன்  டங்ஸ்டன் தடுப்போம்.. மேலூரைக் காப்போம் என பொறிக்கப்பட்ட முகக்கவசம் அணிந்து வந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி சுற்று வட்டார பகுதியில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏல அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து அங்கு பெரியளவில் போராட்டம் வெடித்தது. மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும், மதுரை மேலூர் பகுதியை தமிழ் பண்பாட்டு மண்டலமாக, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் விவசாய சங்க பிரதிநிதிகளும் வலியுறுத்தி நேற்று பேரணி நடத்தினர். மதுரையில் நடந்த டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்ட 5 ஆயிரம் விவசாயிகள் மற்றும் பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதி கட்டுப்பாடுகளை மீறி நடைபயண பேரணி மேற்கொண்டதாக, மதுரை தல்லாகுளம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதை சட்டிக்காட்டி,  டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாஸ்க் அணிந்து வந்துள்ளனர்.

இன்றைய கூட்டத்தொடரில், உடல் நலக் குறைவு காரணமாக  எடப்பாடி பழனிசாமி,  இன்று சட்டசபைக்கு வராத நிலையில், மற்ற எம்.எல்.ஏக்கள், கறுப்புச் சட்டையுடன் மாஸ்க் அணிந்து வந்துள்ளனர்.