சென்னை: ‘அரசியலமைப்பை காப்போம்” என்கிற அரசியல் மாநாடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த மாநாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு காங்கிரஸ் நடத்தும் ‘அரசமைப்புச் சட்டத்தை காப்பாற்றுவோம்” என்கிற அரசியல் மாநாடு நாளை (4.5.2025) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் சென்னை தேனாம்பேட்டை, காங்கிரஸ் மைதானத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் அவர்கள் முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் . ரூபி ஆர். மனோகரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
இந்நிகழ்ச்சியில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள், இந்நாள் – முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள், மாவட்ட, வட்டார ஃ சர்க்கிள், நகர, பேரூர், வார்டு காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், ஊரக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.