சென்னை: தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜகவுடன் அதிமுகவையும் சேர்த்து விரட்டியடிப்போம் என முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
மக்களவை தேர்தலையொட்டி நாடு முழுவதும் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் திமுக, அதிமுக, பாஜக என அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரே உணவு, ஒரே மொழி, ஒரே மதம் என ‘ஒரே’யடியாக இந்தியாவை அழிக்கத் திட்டம் போடும் நாசகார சக்தியான பா.ஜ.க வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு!
பிரதமர் மோடி எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் அவரால் கைப்பற்றவே முடியாத திராவிட எஃகுக் கோட்டையாகவே தமிழ்நாடு என்றும் இருக்கும்!
இந்த இரண்டாவது விடுதலைப் போரில், எதிரிகளோடு, அவர்களுக்குத் துணைபோகும் கட்சிகளையும், தமிழ்நாட்டை வஞ்சித்த அ.தி.மு.க.வையும் சேர்த்து விரட்டியடிப்போம்!
தென்னகத்தின் விடியல் ஒளி டெல்லியிலும் பரவிட இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.