மும்பை,
7 மாதமே ஆன பெண் குழந்தையின் நுரையீரலில் எல்டிஇ பல்பு இருந்ததை அறிந்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதையடுத்து, மருத்துவ குழுவினர் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அந்த பல்பை அகற்றி சாதனை படைத்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 7 மாத பெண் குழந்தை ஒன்று தொடர்ந்து இருமல் மற்றும் மூச்சு விடவும் கஷ்டப்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக அந்த குழந்தையை மருத்துவர்களிடம் காண்பித்து சிகிச்சை பெற்றனர்.
ஆனால், தொடர்ந்து அந்த குழந்தை மூச்சு விட கஷ்டப்பட்டு வந்ததால், மேல் சிகிச்சைக்காக பரேலில் உள்ள பாய் ஜெர்பை வாடியா மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.
அங்குள்ள குழந்தை நல மருத்துவர் குழந்தைக்கு எக்ரே எடுக்க அறிவுறுத்தினார். எக்ஸ்ரேயில் குழந்தையின், வலது பக்கம் உள்ள நுரையீரலில் சிறிய எல்இடி பல்பு இருப்பது தெரியவந்தது. இது மருத்துவர் மற்றும் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விசாரித்ததில், பொம்மை செல்போனை வைத்து விளையாடும் குழந்தை அதில் உள்ள எல்இடி பல்பை கடித்து விழுங்கியிருக்கலாம் என தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு ப்ரோன்சோஸ்கோபி ( Francoscopie) எனப்படும் ப்ரோன்சோஸ்கோபி சிகிச்சை மூலம் நுரையிரல் சிக்கியிருந்த எல்இடி பல்பு அகற்றப்பட்டது. தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.