லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 492 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், லெபனான் மக்கள் மனித கேடயமாக செல்லாதீர்கள் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பினரிடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில்,ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக லெபனான் எல்லையில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தியது.

இதில் வடக்கு இஸ்ரேல் பகுதியில் சிலர் பலியான நிலையில் இஸ்ரேல் பதிலடியாக லெபனான் எல்லைகளில் தாக்குதல்களை தொடங்கி யுள்ளது. கடந்த வாரம் லெபனானில் சைபர் வழி தாக்குதல்கள் மூலம் பேஜர்கள், வாக்கி டாக்கிகளை வெடிக்கச்செய்ததில் 30க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், தற்போது,ஹிஸ்புல்லாக்களின் ஆயுதக்கிடங்குகளை குறிவைத்து  வான் வெளி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. தாக்குதல்.

ஹிஸ்புல்லா பதுங்குத்தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக சொல்லி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட லெபனான் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று திடீரென லெபனான் தலைநகரில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 492 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 1600க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தெற்கு லெபனானில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள 19 இடங்களில் ஹிஸ்புல்லா அமைப்பு ஆயுதக் கிடங்குகளாக பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்த நிலையில், அந்த இடங்களில் நடத்திய தாக்குதலில் தான் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.”  இதை லெபனான் சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.

ஸ்ரேல் – லெபனான் இடையே போர் மூண்டுள்ள நிலையில் லெபனான் மக்களை எச்சரித்து இஸ்ரேல் பிரதமர் வீடியோ வெளியிட்டுள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது வீடியோவில்,   ஹிஸ்புல்லா அமைப்பினரின் கேடயமாக பொதுமக்கள் பலியாக வேண்டாம் என்றும், ஹிஸ்புல்லா அமைப்பினர் தங்கள் ஆயுதங்களை பதுக்கி வைக்க லெபனான் மக்கள் உதவுவதால் அந்த ஆயுதங்கள் எங்கள் மக்களை கொல்கின்றன என்றும் பேசியுள்ளார்.

இஸ்ரேலின் லெபனான் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்கா தனது ராணுவத்தை மத்திய கிழக்கிற்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் பதற்றம் எழுந்துள்ளது.