கான்பூர்

த்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் மின்சார பேருந்து மோதி 6 பேர் மரணம் அடைந்து பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இன்று காலை உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் டாட் மில் குறுக்குச் சாலை பகுதி அருகே, இன்று காலை மின்சார பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் இருந்தவர்கள் மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.  இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்தனர்.

கிழக்கு கான்பூர் காவல் துணை ஆணையர் பிரமோத் குமார் இது குறித்து, “கான்பூரில் போக்குவரத்துச் சாவடி வழியாக வேகமாக வந்த மினாஅர பேருந்து, அங்கிருந்த மூன்று கார்கள் மற்றும் அருகில் நின்றிருந்த இருசக்கர வாகனங்களின் மீது சேதப்படுத்தியதுடன் ஒரு லாரி மீதும் மோதி நின்றது..

இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். இதில் காயமடைந்த 12 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த பேருந்தின் ஓட்டுநர் விபத்து நடந்த உடன் தலைமறைவாகிவிட்டார்.  நாங்கள் அவரைத் தீவிரமாக அவரைத் தேடி வருகிறோம்”’ என தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத், பிரதமர் மோடி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

[youtube-feed feed=1]