டெல்லி:
உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க 5 பேரை மத்திய சட்ட அமைச்சகம் பரிந்துரை செய்யுள்ளது. இன்னும் சில தினங்களில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சட்ட அமைச்சகத்தின் பரிந்துரை கோப்புகள் பிரதமர் அலுவலகத்தில் உள்ளன. இந்த வாரம் குடியரசுத் தலைவரது ஒப்புதலுக்கு அனுப்ப பட உள்ளன.
கொலீஜியம் என்ற அமைப்புதான் நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைக்கும் அமைப்பாகும். உச்சநீதிமன்றத்தில் தற்போது 23 நீதிபதிகள் உள்ளனர். தற்போது கொலீஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகளை சேர்த்தால் 28 நீதிபதிகள் இருப்பார்கள். அப்போதும் 3 நீதிபதிகள் பற்றாக்குறை இருக்கும்.
கொலீஜியம் ஏற்கனவே 8 உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளை நியமிக்க கோரும் பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.
மேலும் வெவ்வேறு உயர்நீதிமன்றங்களில் பணியாற்றும் ஏழு நீதிபதிகளை தலைமை நீதிபதிகளாக பதவி உயர்த்தக்கோரும் கொலீஜியத்தின் பரிந்துரையை சட்ட அமைச்சகம் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[youtube-feed feed=1]