வாஷிங்டன்
இன்றைய காலை நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,63,479 ஆகி உள்ளது
உலகை கடுமளவில் பாதித்து வரும் கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் பரவி வருகிறது. உலக அளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,84,381 ஆகி உள்ளது. இதில் 37,780 பேர் மரணம் அடைந்துள்ளனர் 1,65,035 பேர் குணம் அடைந்துளனர்.
பாதிக்கப்பட்டோர் அமெரிக்காவில் அதிக அளவில் உள்ளனர். அங்கு நேற்று புதிய நோயாளிகள் 19,958 பேர் கண்டறியப்பட்டு மொத்தம்1,63,479 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 565 பேர் மரணம் அடைந்துள்ளனர். மரண எண்ணிக்கை 3148 ஆகி உள்ளது.
இத்தாலியில் நேற்று புதிய நோயாளிகள் 4050 பேர் கண்டறியப்பட்டு மொத்தம்1,01,739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 812பேர் மரணம் அடைந்துள்ளனர். மரண எண்ணிக்கை 11,591 ஆகி உள்ளது. உலக அளவில் இது மிகவும் அதிகமாகும்
ஸ்பெயின் நாட்டில் நேற்று புதிய நோயாளிகள் 7846 பேர் கண்டறியப்பட்டு மொத்தம்87,596 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 913 பேர் மரணம் அடைந்துள்ளனர். மரண எண்ணிக்கை 7716 ஆகி உள்ளது.
கொரோனாவின் ஊற்றுக் கண் என கூறப்படும் சீனாவில் நேற்று புதிய நோயாளிகள் 31 பேர் கண்டறியப்பட்டு மொத்தம் 81,740 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். மரண எண்ணிக்கை 3304 ஆகி உள்ளது.
இந்தியாவில் நேற்று புதிய நோயாளிகள் 227 பேர் கண்டறியப்பட்டு மொத்தம் 1251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 5 பேர் மரணம் அடைந்துள்ளனர். மரண எண்ணிக்கை 32 ஆகி உள்ளது. இதில் தமிழகத்தில் நேற்று 17 பேர் பாதிக்கப்பட்டு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆகி உள்ளது.