மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் பாலாஜி சென்னையில் இன்று திடீரென மரணமடைந்துள்ளார்.
காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ரவிச்சந்திரன். பிறகு எண்ணற்ற படங்களில் நடித்தார். நடிகராக மட்டுமின்றி இயக்குனராக, தயாரிப்பாளராக வலம் வந்தவர். இவர் கடந்த 2011ம் ஆண்டு மறைந்தார்.
ரவிச்சந்திரனுக்கு பாலாஜி, அம்சவர்தன் என்ற இரண்டு மகன்களும், லாவண்யா என்ற மகளும் உள்ளனர்.
மூத்தமகன் பாலாஜி (50) வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த பாலாஜி இன்று சென்னையில் காலமானார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மகன் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று மாலை அவரது இல்லத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.