சென்னை
கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் 86.15 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
இன்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
”சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தை விட பிப்ரவரி மாதத்தில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 624 பயணிகள் மெட்ரோ ரயிலில் அதிகமாகப் பயணம் செய்துள்ளனர்.
இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை ஆகும்.
(01.01.2024 முதல் 31.01.2024 வரை) மொத்தம் 84,63,384 பயணிகளில் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். (01.02.2024 முதல் 29.02.2024) வரை மொத்தம் 86,15,008 பயணிகளில் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக (09.02.2024) அன்று 3,26,786 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2024, பிப்ரவரி மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 35,05,644 பயணிகள், பயண அட்டைகளை பயன்படுத்தி 38,94,639 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 28.640 பயணிகள், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 5,959 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 11,80,126 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.”
என்று கூறப்பட்டுள்ளது.
Chennai, Metro rail, Last month 86.15 Lac, travelled,