திருவனந்தபுரம்:

ந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ், கேரளாவில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரை  202 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும், மொத்தம் 1,41,211 பேர் கண்காணிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக  20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்து உள்ளார்.

இவர்களில் 8 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 7 பேர் காசர்கோடு மாவட்டத்தையும் சேர்ந்த வர்கள். மற்றும்,  திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும்,  இவர்களில் 18 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், மீதமுள்ள 2 பேர் இவர்களிடம் இருந்து நோய் தொற்று பெற்றவர்கள் என்றும் தெரிவித்து உள்ளார்,.

கேரளாவில் இதுவரை 202 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனை களில் 181 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கேரளாவில் 1,41,211 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,40, 618 பேர் வீடுகளிலும், 593 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப் பில் உள்ளனர். நோய் அறிகுறி உள்ள 6690 பேரின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் 5518 பேரின் பரிசோதனை முடிவு நெகட்டிவ் ஆக உள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.