ஸ்ரீநகர்:
பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட வரும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி கைது நிஷார் தார், பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார்.

காஷ்மீர் மாவட்டம் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள ஹஜின் பகுதியைச் சேர்ந்த நிஷார் அகமது தார். இவர், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தில் இணைந்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வந்தான். ஏற்கனவே நடை பெற்ற தாக்குதலின்போது காயம் அடைந்த நிஷார், தப்பி ஓடி தலைமறைவான நிலையில், உள்ளூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது தெரிய வந்தது. அவரை பாதுகாப்பு படையினர் கைது செய்து, விசாரணை மேற்கண்டு வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel