பெங்களூரு
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் தற்காலிக மயானங்கள் அமைக்கக்க நிலம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு கடுமையாக உள்ளது. தினசரி பாதிப்புக்கள் 2 லட்சத்துக்கும் மேலாகி உள்ளது. கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழகம், ஆந்திரா ஆகியவை முதல் 5 வரிசையில் உள்ளன. மூன்றாம் இடத்தில் இருக்கும் கர்நாடகாவில் தினசரி 140க்கும் அதிகமானோர் மரணம் அடைகின்றனர்.
கொரோனா மரணங்கள் அதிகரித்து வருவதால் அனைத்து நகரில் உள்ள மயானங்களும் நிரம்பி உள்ளன. எனவே சடலங்கள் இறுதிச் சடங்குகளுக்குக் காத்திருக்கும் அவல நிலை கர்நாடகாவில் ஏற்பட்டுள்ளது. இது அம்மாநில மக்களுக்கு கடும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையொட்டி கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் ஆர் அசோகா அனைத்து நகரத் துணை ஆணையர்களுக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி பெங்களூரு உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களின் புற நகர்ப்பகுதிகளில் தற்காலிக மயானங்கள் அமைக்க நிலம் ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]