கோவை

கோவை நகரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு இடம் தேர்வு உறுதியாகி உள்ளது.

நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கோவை மாநகரில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்து இருந்தார். எனவே இதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்தது.

இதற்கு முதற்கட்டமாக கோவை ஒண்டிப்புதூர், எல் & டி நெடுஞ்சாலை, பாரதியார் பல்கலைக்கழகம் அருகே உள்ள இடம், மத்திய சிறை மைதானம் ஆகிய 4 இடங்கள் கண்டறியப்பட்டன ஏற்கனவே  மைதானம், வீரர்கள் காத்திருப்பு அறை, உடை மாற்றுவதற்கான அறை, பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளுடன் கிரிக்கெட் மைதானம் அமைக்க, 20 ஏக்கர் நிலம் தேவைப்படும் என விளையாட்டு துறை சார்பில் ஏற்கனவே தெரிவிககப்பட்டு இருந்தது.

தற்பொழுது இடம் தேர்வு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள 20.72 ஏக்கர் சென்ட் பரப்பில் உள்ள அரசு புறம்போக்கு – திறந்த வெளி சிறை சாலை உள்ள நிலத்தை, சர்வதேச கிரி்கெட் மைதானம் அமைக்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு நிலம் மாறுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.