பாட்னா: அரசு வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்றது தொடர்பான வழக்கில், ஜாமினில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் லாலுபிரசாத் உள்பட அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
அரசு வேலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்றத தொடர்பான வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை, இந்த வழக்கு தொடர்பாக, கடந்த ஆண்டு, லாலு பிரசாத்தின் குடும்ப உறுப்பினர்களான அவரது மனைவி ரப்ரி தேவி மற்றும் அவர்களது மகள்கள் மிசா பாரதி மற்றும் ஹேமா யாதவ் ஆகியோரை குற்றம் சாட்டப்பட்டவர்களாக டெல்லி நீதிமன்றத்தில் ED குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இந்த நிலையில், ரயில்வே வேலை மோசடி தொடர்பான வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. பாட்னாவில் உள்ள அலுவலகத்தில் லாலு மற்றும் அவரது குடும்பத்தினர் நாளை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
பீகார் முன்னாள் முதல்வரான, லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009 ம் ஆண்டு வரை அப்போதைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சராக பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில் ரயில்வே துறையில் குரூப் டி பதவிக்கு உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டது. இதில் ஏராளமானோரை முறைகேடாக பணியில் இணைந்ததாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது பலருக்கு அரசு வேலை வழங்கியதுடன், அதற்கு லஞ்சமாக அவர்களின் நிலத்தை தனது குடும்பத்தினர் பெயருக்கு பதிவு செய்து வாங்கியது அம்பலமானது. இதுதொடர்பாக, சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குகள் பதிவு செய்து, அனைவரையும் கைது செய்தது. இந்த வழக்கில், லாலு உள்பட அவரது குடும்பத்தினர் ஜாமினில் உள்ளனர்.
இந்த நிலையில், அமலாக்கத்துறை லாலு பிரசாத் யாதவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த மோசடி வழககில் அவரது மனைவிராப்ரி தேவி ,மகள் மிசா பார்தி ஆகியோர், பாட்னாவில் உள்ள அலுவலகத்தில் நாளை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளது.