டெல்லி

லாலு பிரசாத் யாதவ் மகா கும்பமேளா அர்த்தமற்றது எனக் கூறி உள்ளார்/

மகா கும்பமேளாவுக்கு செல்லும் பயணிகள் டெல்லி ரெயில் நிலையத்தில் அதிக அளவில் திரண்டதால் கடுமையன கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ரயிலில் ஏற பயணிகள் முண்டியடித்ததால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியாகினர்.

முன்னாள் ரெயில்வே அமைச்சரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் நிறுவனருமான லாலு பிரசாத்,

“கூட்ட நெரிசல் சம்பவம் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு போதிய ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்பதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது.

இந்தக் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும். இது ரயில்வே துறையின் முழு தோல்வியாகும். மகா கும்பமேளாவே அர்த்தமற்றது”

எனக் கூறியுள்ளார்.