பாட்னா
இந்தியா கூட்டணியில் இணையுமாறு நிதிஷ்குமாருக்கு லாலு பிரசாத் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடந்த 2013 ஆம் ஆண்டு, பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் இணைந்து மீண்டும் முதல்வர்ஆனார். பிறகு 2017 ஆம் ஆண்டு, ராஷ்டிரீய ஜனதாதள உறவை துண்டித்துக் கொண்டு, மீண்டும் பா.ஜனதாவுடன் கைகோர்த்தார்.
அதன்பின் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மீண்டும் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி, லாலுவின் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம், மீண்டும் பா.ஜனதாவுடன் கைகோர்த்தார். இவ்வாற்ஜ் 10 ஆண்டுகளில் நிதிஷ்குமார் 4 தடவை அணி மாறினார்.
ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ்
”நிதிஷ்குமார் ‘இந்தியா’ கூட்டணியில் எங்களுடன் சேர்ந்து பணியாற்றும் நேரம் வந்து விட்டது. அப்படி வந்தால், அவரது கடந்தகால தவறுகள் அனைத்தையும் நான் மன்னிப்பேன். அவருக்கு கதவு திறந்தே இருக்கிறது. அவர் தனது கதவுகளை திறந்தால்தான், இருதரப்பில் இருந்தும் ஆட்கள் நடமாட வசதியாக இருக்கும்.”
என அழைப்பு விடுத்துள்ளார்.