பாட்னா,
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் இன்று சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

பீகார் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் இருந்தபோது மாட்டு தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்த தாக அவர்மீது சிபிஐ 5 வழக்குகளை  பதிவு செய்தது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் ஜாமினில் வெளியே உள்ளார்.

சிறை தண்டனைக்கு தடை விதிக்க கோரி லால்லு உச்சநீதி மன்றத்தில் மனு  செய்திருந்தார். இந்த வழக்கில், பீகார் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழக்கை திரும்பவும் விசாரிக்க உத்தரவிட்டது.

இதனையடுத்து  வழக்கை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் திரும்பவும் விசாரித்து வருகிறது.

ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருகிறது. வழக்கில் ஆஜராக லாலுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதைத்தொடர்ந்து  இன்று காலையில் நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ் நேரில் ஆஜரானார்.

1991-1993 காலகட்டத்தில் பீகார் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.