
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீகாார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு வருட சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக நடந்துவந்த மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் கடந்த டிசம்பர் 23ம் தேதி ராஞ்சி சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்தது. லாலு பிரசாத் யாதவ் உட்பட 16 பேரை குற்றவாளிகள் என அறிவித்தது. அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு விவரத்தை அறிவித்தது. இதில் லாலுவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் ஐந்து லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel