பிரதமர் நரேந்திர மோடி சகாரா அமைப்பிடம் 40 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக தேதி வாரியாக ஆதாரங்களுடன் காங்கிரஸ் துணைதலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியிருந்தார். தற்பொழுது ராகுலின் அந்த குற்றச்சாட்டை வழிமொழியும் விதத்தில் இராஷ்டிரிய ஜனதாதள் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பிரதமர் நரேந்திர மோடியிடம் தனது ட்விட்டர் தளத்தின் மூலம் சில முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார். அவையன:

1. ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு குறித்து மோடி அமைதி காப்பது ஏன்? இது பற்றி உச்சநீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்த வேண்டும்
2. சரியான ஆவணங்களிலிருந்து ஆதாரங்களை காட்டி ராகுல்காந்தி பிரதமர் மோடி மீது ரூ.40 கோடி லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது சாதாரண குற்றச்சாட்டு அல்ல!
3. தன்னை எளிமையான மனிதராக நரேந்திர மோடி முன்னிறுத்துகிறார். எளிமையான மனிதர்களின் வாழ்க்கை திறந்த புத்தகம் போல இருக்க வேண்டும். எனவே மோடி அந்த 40 கோடி ரூபாய் குறித்து வாய் திறக்க வேண்டும்.
4. மோடியின் அமைதி அவரது நன்மதிப்பை சர்வதேச அளவில் குலைத்துப்போடும். எனவே அவர் தனது அமைதியை கலைத்துவிட்டு வெளியே வந்து இது குறித்து பேச வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 
Congress Vice President Rahul Gandhi after leveling corruption charges on Prime Minister Narendra Modi at Mehsana rally in Gujarat has now found backing from RJD chief Lalu Prasad.