டில்லி

லால்பகதூர் சாஸ்திரி பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து வாங்கிய ரூ.5000 கடனை அவர் இறந்த பின் அவர் குடும்பத்தினர் திருப்பி செலுத்தி உள்ளனர்.

சமீபத்தில் நிரவ் மோடி மோசடி வழக்கில் விதிகளை மீறி கடன் கொடுத்ததாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் மீது புகார் எழுந்துள்ளது.     ஆனால் இதே வங்கியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு இதற்கு நேர்மாறான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.   இதை காங்கிரஸ் தலைவரான சஷி தரூர் உட்பட பலரும் தமது டிவிட்டரில் பதிந்துள்ளனர்.

முன்னாள் பிரதமரான மறைந்த லால்பகதூர் சாஸ்திரி தான் பிரதமரானதும் ஒரு ஃபியட் கார் வாங்க விரும்பி உள்ளார்.  அந்த காரின் அப்போதைய விலை ரூ. 12000 ஆகும்.  சாஸ்திரியிடம் இருந்ததோ ரூ. 7000 மட்டுமே.   அதனால் மீதமுள்ள ரூ. 5000 க்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடனுக்கு விண்ணப்பித்தார்.    அந்தக் கடனில் அவர் கார் வாங்கி உள்ளார்.

கடந்த 1966 ஆம் வருடம் அவர் தாஷ்கண்ட் சென்று இந்திய – பாக் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடார்.   அன்று இரவு மரணம் அடைந்தார்.    அதன் பிறகு அவர் மனைவி லலிதா சாஸ்திரி தனக்கு வந்த குடும்ப ஓய்வூதியத் தொகையில் இருந்து தவணை முறையில் முழுக்கடனையும் அடைத்துள்ளார்.   இதை சாஸ்திரியின் பேரன் ஆதர்ஷ் சாஸ்திரியும் தெரிவித்துள்ளார்.

இந்த கார் லால்பகதூர் சாஸ்திரி நினைவகத்தில் இன்றும் காட்சிப்பொருளாக உள்ளது.

[youtube-feed feed=1]