கோதண்டராமன் சபாபதி  அவர்களின் முகநூல் பதிவு:
லட்சுமி ராமகிருஷ்ணன்
லட்சுமி ராமகிருஷ்ணன்

“நீங்கள் சொன்னால் நம்புவீர்களா தெரியாது.
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் ஒரு நிகழ்ச்சிகூட நேற்றுவரை பார்த்ததில்லை.பார்க்கவும் விரும்பயதில்லை.
இன்று நண்பர் செல்போனில் காட்டினார்.

ஒரு பெண் தன்னை தவறாக போட்டோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்தவன் பற்றிய கதை.
‘விதி’ படத்தில் ஜெய்சங்கர் கேட்கும் கேள்விகள் எல்லாம் சாதாரணம். லட்சுமி ராமகிருஷ்ணன் பின்னியெடுக்கிறார்.
ஒரு கட்டத்தில் சமுதாயத்தில் ஒரு பெண்ணை இந்த பாழும் ஆண் வர்க்கம் பாடாய் படுத்துவது கண்டு பொங்கியெழுகிறார் லட்சுமி.
” நீ அவன்கிட்ட கேட்டியாம்மா? உங்க வீட்டுப்பொண்ணா இருந்தா இப்படி செய்வியான்னு கேட்டியாம்மா?” பாதிக்கப்பட்டு அழும் பெண்ணை பார்த்து கேட்கிறார்.
அவர் குரலில் ரௌத்திரம்.ரௌத்திரம் என்பது கூட குறைவான வார்த்தைதான்.அத்தனை கோபம்.
“இதுவே உன் பெண்ணாக இருந்தால் இப்படிதான் டிவி கேமரா முன்னடி வச்சு கேள்வி கேட்பீங்களா லட்சுமி?” என்ற கேள்வியை லட்சுமியின் கோபத்தில் பத்தில் ஒரு பங்கு கோபத்தோடு அவரிடம் கேள்வி கேட்கதான் அரங்கத்தில் யாருமில்லை.”