‘பட்டாஸ்’ இன்று ரிலீசானத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘கர்ணன்’ படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் தனுஷ்.

ரஜிஷா விஜயன் நாயகியாக நடிக்கவுள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.

வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு துவங்கியிருக்கும் இந்நிலையில், ‘கர்ணன்’ என்ற தலைப்பை மாற்றக் கோரி சிவாஜி சமூகநலப் பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் தற்போது நடிகை லட்சுமி பிரியா இணைந்துள்ளாராம். இதை அவரே ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இவர் முன் தினம் பார்த்தேனே, தர்மயுத்தம், கள்ளபடம், ரிச்சி, ஓடு ராஜா ஓடு என பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சாஃப்ட்சேர் நிறுவனத்தில் HR ஆக பணியாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]