டெல்லி: லட்சத்தீவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதி உள்ளார்.

இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் சுமார் 65 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இயற்கை அழகால் சூழப்பட்டுள்ள லட்சத்தீவு நாட்டின் சுற்றுலாத் துறை வருவாய் ஈட்டும் முதுகெலும்பாக உள்ளது. மீன்பிடித் தொழிலும் பிரதானமாக விளங்குகிறது. பொதுவாக அமைதியின் பிறப்பிடம் என்று வர்ணிக்கப்படும் லட்சத்தீவில் தற்போது மத்திய அரசு மூலமாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

அங்கு  மக்கள் விரோத செயலில் ஈஈடுபட்டு வரும் பிரஃபுல் படேலை நீக்கிவிட்டு அரசியல் தொடர்பில்லாத ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று குரல்கள் வலுத்துள்ளன. இந்த விவகாரத்தில் பிரதமர் இதில் தலையிட்டு அவரைத் திரும்பப் பெற வேண்டும் என ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கடிதம் எழுதி உள்ளார். அதில்,  லட்சத்திவில் பணியாற்றி வரும்  பிரஃபுல் கோடா படேல் என்ற அதிகாரி மக்கள் விரோதச் சட்டங்களை வலுக்கட்டாயமாகத் திணித்து அங்கு வாழும் இஸ்லாமியர்களை அந்நியப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் வேதனை அளிக்கிறது.

அதிகாரியின் நடவடிக்கை , இது வரைவு லட்சத்தீவு மேம்பாட்டு ஆணையம் தீவுகளின் “சுற்றுச்சூழல் புனிதத்தை” குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், “நில உரிமையை பாதுகாப்பதை” குறைத்து வருவதாகவும், “சட்டப்பூர்வமாக கடுமையாக கட்டுப்படுத்துகிறது” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

தீவுகளின் சுற்றுச்சூழல் புனிதத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்  அதிகாரியின்  முயற்சி லட்சத்தீவு மேம்பாட்டு ஆணைய ஒழுங்குமுறை வரைவில் தெளிவாக உள்ளது.  அவரது நடவடிக்கைகள்,  மக்களின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

லட்சத்தீவின் அழகிய இயற்கை அழகும் கலாச்சாரமும் பல தலைமுறைகளாக மக்களை ஈர்த்துள்ளன என்பதை சுட்டிக்காட்டியுள்ள ராகுல்,  “லட்சத்தீவின் நிர்வாகி ஸ்ரீ பிரபுல் கோடா படேல் அறிவித்த மக்கள் விரோத கொள்கைகளால் அந்த மாநில மக்களின் எதிர்காலம் அச்சுறுத்தப்படுகிறது”.

சமூக விரோத செயல்களைத் தடுப்பது, லட்சத்தீவு விலங்குகள் பாதுகாப்பு ஒழுங்குமுறை மற்றும் ஆல்கஹால் விற்பனை மீதான கட்டுப்பாடுகளை நீக்குதல் போன்ற விதிமுறை களில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் உள்ளூர் சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் இஸ்லாமியர்கள் மீதான திட்டமிட்டு தாக்குதல்.

“வணிக ரீதியான லாபங்களுக்காக வாழ்வாதாரம், பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி தியாகம் செய்யப்படுகின்றன,

வளர்ச்சி மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரித்தல் என்ற போர்வையில், கடுமையான விதிமுறைகள்,  அபராதம் விதிப்பது போன்றவை  அடிமட்ட ஜனநாயகத்தை வலுவிழக்க செய்யும் செயல்.

“தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடமோ அல்லது பொதுமக்களிடமோ முறையாக ஆலோசிக்காமல் நிர்வாகி ஒருதலைப்பட்சமாக பெரும் மாற்றங்களை முன்வைத்துள்ளார். இந்த தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராக லட்சத்தீவு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உடைய  உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யும் பஞ்சாயத்து ஒழுங்குமுறை வரைவில் உள்ள விதி “அப்பட்டமாக ஜனநாயக விரோதமானது”.

என்று பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்திய உளள ராகுல்காந்தி,

லட்சத்தீவு மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மதிக்கும் மற்றும் அவர்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் ஒரு வளர்ச்சி பார்வைக்கு தகுதியானவர்கள். “இந்த விஷயத்தில் பிரதமர் உடனே  தலையிடவும், மேற்கூறிய உத்தரவுகள் திரும்பப் பெறப்படுவதை உறுதி செய்யவும் கேட்டுக்கொள்கிறேன். அவரை உடனே திரும்ப அழைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

ஏற்கனவே லட்சீத்தீவு தொட்ர்பாக ராகுல் நேற்று  பதிவிட்ட டிவிட்டில்,

“லட்சத்தீவு என்பது கடலில் இந்தியாவின் நகை. அதிகாரத்தில் இருக்கும் அறிவற்ற பெரியவர்கள் அதை அழிக்கிறார்கள். நான் லட்சத்தீவு மக்களுடன் நிற்கிறேன்” என்று  தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.