புதுடெல்லி: 57 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய இந்திய ஆட்டோமொபைல் தொழில்துறை, மோடியின் கொள்கையால் பெரும் வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாகன விற்பனை பெருமளவு சரிந்த காரணத்தால், அடுத்த காலாண்டில் இன்னும் ஏராளமானோர் வேலையிழக்கும் நிலை ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஃப்ரன்ட்-என்ட் விற்பனை பணிகள் மற்றும் அதனுடன் தொடர்புடையதாக கூறப்படும் டெக்னிக்கல், பெயின்டிங், வெல்டிங், காஸ்டிங், ப்ரடக்சன் டெக்னாலஜி மற்றும் சேவைகள் உள்ளிட்ட பணிநிலைகளில் தொடக்கநிலை அபாயத்தில் இருக்கின்றன என்று தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களில் மட்டும் இத்துறையில் 100000 பேர் வேலையிழந்துள்ளனர். அடுத்த சில மாதங்களுக்கும் இதேநிலை தொடர்ந்தால், இத்துறையில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் வேலையிழப்பார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இன்று ஆட்டோமொபைல் துறை பாதிப்பிற்கு ஆளானதுபோல், நாளை வேறு துறைகளும் இந்த அரசின் திறனற்ற மற்றும் முதிர்ச்சியற்ற கொள்கைகளால் பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.