ட்டாவா

நேற்று நடந்த வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழாவில் பாஜக பெண் எம் எல் ஏ ஒருவர் ரயில் தண்டவாளத்தில் விழுந்த்ள்ளார்.

நேற்று ஆக்ரா-வாரணாசி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.  ரயில்வே அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ஆக்ராவில் இருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்., இந்த நிகழ்வின்போது இட்டவா தொகுதி பாஜக எம்.எல்.ஏ சரிதா படோரியா கலந்துகொண்டார்.

அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைக்கும்போது சரிதா படோரியா (வயது 61) நடைமேடையில் கூட்டம் நெரிசல் காரணமாக திடீரென ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று மாலை 6 மணியளவில் நடைமேடையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்த வீடியோவில், நடைமேடையில் ஏராளமானோர் பச்சைக் கொடியை ஏந்தியபடி இருந்த நிலையில், பாஜக பெண் எம்எல்ஏவும் கூட்டத்தில் ஒருவராக பச்சைக் கொடியை ஏந்தியப்படி நின்றுக்கொண்டுள்ளார்.பிறக் தண்டவாளத்தில் தவறி விழுந்த எம்.எல்.ஏ.வை பாதுகாவலர்கள், கட்சி தொண்டர்கள் சேர்ந்து உடனடியாக மீட்கின்றனர்

எம் எல் ஏ அருகில் இருந்தவர்கள் தகவல் கொடுத்து ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.  பாதுகாவலர்கள் பாஜக பெண் எம்.எல்.ஏவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சரிதா படோரியா தற்போது வீட்டில் ஓய்வு எடுத்துவருவதாகவும் உடலில் இந்தவித காயமும் இன்றி நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்ததாக கட்சி நிர்வாகிகள் அறிவித்தனர்.

BJP. Lady MLA , UP, Railway track, fall down