7 விமானநிலைய பயணிகள் கை பைகளுக்கு மீண்டும் சீல்

Must read

டெல்லி:

தேவையான பாதுகாப்பு கருவிகள் இல்லாத காரணத்தால் பயணிகளின் கை பைகளுக்கு (ஹேண்ட் லக்கேஜ்) அடையாள வில்லைகளுடன் சீல் வைக்கும் பணியை 7 விமான நிலையங்களில் மீண்டும் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

விமான பயணிகள் லக்கேஜ் பிரிவில் குறிப்பட்ட அளவு பொருட்களும், இது தவிர கை பைகளில் குறிப்பிட்ட அளவு பொருட்கள் எ டுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. கை பைகளை பயணிகள் இருக்கைக்கு எடுத்து செல்லலாம். இதர உடமைகள் விமானத்தின் சரக்கு பெட்டகத்தில் வைக்கப்படும். இந்த கை பைகளுக்கு பாதுகாப்பு நலன் கருதி அடையாள அட்டை தொங்கவிடப்பட்டு அதில் பாதுகாப்பு அதிகாரிகளின் ஒப்புதல் சீட் போடப்படும்.

இந்த சீல் போடும் முறைக்கு 7 விமானநிலையங்களில் விலக்கு அளித்து சிவில் விமான போக்குவரத்து பணியகம் (பிசிஏஎஸ்) கொண்டு வந்த உத்தரவுக்க உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜூ, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தலைமையில் கடந்த 2ம் தேதி நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் தடை விதிக்கப்பட்டது.

முன்னதாக விமானநிலையங்களில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் மத்திய தொழில் பாதுகாப்பு படை எதிர்ப்பையும் மீறி டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, கொச்சின், ஐதராபாத், அகமதாபாத் ஆகிய 7 விமானநிலையங்களில் பயணிகள் கைகளில் விமானங்களுக்கு எடுத்துச் செல்லும் பைகளுக்கு அடையாள வில்லையுடன் கூடிய சீல் (ஸ்டாம்பிங் டேக்) வைப்பதற்கு விலக்கு அளித்து பிசிஏஎஸ் கடந்த மாதம் 23ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிசிஏஸ், சிஐஎஸ்எப் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள், விமானங்களை இயக்குபவர்களை கொண்ட குழு இந்த 7 விமானநிலையங்களில் கை பைகளுக்கு சீல் வைக்கும் முறையை விலக்கியதால் பாதுகாப்பில் ஏற்பட்ட ஓட்டை குறித்து ஆய்வு செய்யவுள்ளது.
‘‘இந்த குழுவின் ஒப்புதலை பெற்றுக் கொண்டு தான் 7 விமானநிலையங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சிஐஎஸ்எப் பாதுகாப்பில் உள்ள இதர 52 விமானநிலையங்களிலும் பாதுகாப்பு வடிவமைப்புகள் மற்றுமு சிசிடிவி முறையை மாற்றி அமைத்துவிட்டு அங்கும் இந்த முறையை அமல்படுத்த வேண்டும்’’ என்று சிஐஎஸ்எப் தெரிவித்துள்ளது.

சிஐஎஸ்எப் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தேவையான நவீன பாதுகாப்பு கருவிகளை முதலில் நிறுவ வேண்டும். கை பைகளுக்கு சீல் போடும் முறையை விலக்கி கொள்வதை வெற்றிகரமாக அமல்படுத்தும் வகையில், விமானநிலையங்களில் பாதுகாப்பு முறையை உயர்த்தி பிடிக்க வேண்டியது முக்கியம். ஒட்டுமொத்த கண்காணிப்புக்கு வகை செய்யும் வகையில் இந்த சீல் வைக்கும் முறை உள்ளது. இத்தகைய உயர் பாதுகாப்பை உறுதி செய்யும் முறையை அதிநவீன கருவிகளால் மட்டுமே இதை மாற்றி அமைக்க முடியும்’’ என்றார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட சிஐஎஸ்ப் தலைவர் ஓ. பி. சிங் மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை செயலாளர் சவுபே ஆகியோர் பேசுகையில், ‘‘பாதுகாப்பு பகுதிளில் நவீன ஹெச்டி தர முப்பரிமான சிசிடிவி கேமராக்கள், முழு சார்ஜ் பேக் அப் வசதியுடன் கூடிய கூடுதல் கேமராக்கள், சிசிடிவி வீடியோ ஆய்வாளர்கள், எளிதில் கணக்கிடும் வகையில் ஆக்ரிலிக் சீட் வசதியுடன் கூடிய எக்ஸ்ரே லக்கேஜ் பரிசோதனை முறை ஆகியவை வேண்டும்’’ என்று வலியுறுத்தினர்.

கை பைகளுக்கு சீல் வைக்கும் முறை தொடர்வது குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் ரிஜிஜூ தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘‘இதில் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை. 59 விமானநிலையங்களையும் குழு பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பி க்கும். அதன் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

7 விமானநிலையங்களில் பாதுகாப்பு ஓட்டை எங்கெங்கு உள்ளது என்பதை அந்த குழு இந்த மாத இறுதிக்குள் முடிவு செய்யும். அதன் பிறகு அடுத்த மாதம் முதல் சீல் வைக்கும் முறைக்கு விடை கொடுக்கப்படும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த மாற்றம் தேவைப்படுகிறது என்று கூறிய சிஐஎஸ்எப் எனினும் ‘‘எக்ஸ் ரே ஸ்கேன் பரிசோதனைக்கு பிறகு தடை செய்யப்பட்ட பொருட்களை பயணிகள் கை பையில் இருந்து எடுத்து பயன்படுத்த முடியாத வகையில் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளது.

மேலும் கூறுகையில், ‘‘பிசிஏஎஸ் தெரிவித்துள்ள 7 விமானநிலையங்களில் உள்ள சிசிடிவி கேமரா முறை மற்றும் பாதுகாப்பு வடிவமைப்பை அந்த குழு ஆய்வு செய்யும். அதன் பிறகு சிஐஎஸ்எப் தெரிவித்துள்ள ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த குழு பரிந்துரை செய்யும்’’ என தெரிவித்துள்ளது.

கை பைகளுக்கு சீல் வைப்பதில் இருந்து விலக்கு அளித்து நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, பயணிகளுக்கு சவுகர்யமான பயணத்தை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கத்தோடு இந்த திட்டம் பரீட்சாத்திர முறையில் 12 விமானநிலையங்களில் செயல்படுத்த கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது. குறிப்பிட்ட சில இடங்களில் நேரடி கண்காணிப்பு மற்றும் கேமரா கண்காணிப்பு மூலம் கட ந்த மாதம் மேற்கொண்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது என்று பிசிஏஎஸ் கருத்துக்களை பெற்று பதிவு செய்துள்ளது.

More articles

Latest article