
சென்னை
சென்னையில் இருந்து குவைத் செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து குவைத்துக்கு விமானம் ஒன்று செல்ல இருந்தது.
குவைத் ஏர்வேஸ் இந்த விமான சேவையை நடத்துகிறது.
இந்த விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் 106 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர்.
இவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து வருவதாக குவைத் ஏர்வேஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel