4 இயக்குநர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குட்டி ஸ்டோரி’. இப்படம் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது .

கவுதம வாசுதேவ், நலன் குமாரசாமி, விஜய், வெங்கட் பிரபு ஆகிய இயக்குநர்களின் 4 கதைகளைக்கொண்ட படம் குட்டி ஸ்டோரியாக உருவாகியுள்ளது.

கவுதம் வாசுதேவ், விஜய், வெங்கட் பிரபு, நலம் குமாரசாமி ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள குட்டி ஸ்டோரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளிவிட்டுள்ளார்.

இதில் விஜய்சேதுபதி மற்றும் அதிதி பாலன் பகுதியை நலன்குமாரசாமி இயக்கியுள்ளார். கௌதம் மேனன் மற்றும் அமலாபால் பகுதியை கெளதம் மேனன் இயக்கி உள்ளார். மேலும் வருண், மேகா ஆகாஷ் பகுதியை விஜய்யும், சாக்சி அகர்வால் பகுதியை வெங்கட்பிரபுவும் இயக்கி உள்ளார்கள். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி தற்போது வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. யாருக்கும் தெரியாமல் மாடிக்கு சென்று விஜய் சேதுபதி ஃபோன் பேசும் காட்சி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் இரண்டாம் ஸ்னீக் பீக் காட்சி தற்போது வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி செய்வது போல் கெளதம் மேனனின் காட்சிகள் அமைந்துள்ளது. இந்த ஸ்னீக் பீக்கில் ரோபோ ஷங்கரின் காட்சிகள் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. அமலா பால் மற்றும் வினோத் கிஷன் நடித்துள்ளனர்.