4 இயக்குநர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குட்டி ஸ்டோரி’. இப்படம் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது .

கவுதம வாசுதேவ், நலன் குமாரசாமி, விஜய், வெங்கட் பிரபு ஆகிய இயக்குநர்களின் 4 கதைகளைக்கொண்ட படம் குட்டி ஸ்டோரியாக உருவாகியுள்ளது.

கவுதம் வாசுதேவ், விஜய், வெங்கட் பிரபு, நலம் குமாரசாமி ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள குட்டி ஸ்டோரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளிவிட்டுள்ளார்.

இதில் விஜய்சேதுபதி மற்றும் அதிதி பாலன் பகுதியை நலன்குமாரசாமி இயக்கியுள்ளார். கௌதம் மேனன் மற்றும் அமலாபால் பகுதியை கெளதம் மேனன் இயக்கி உள்ளார். மேலும் வருண், மேகா ஆகாஷ் பகுதியை விஜய்யும், சாக்சி அகர்வால் பகுதியை வெங்கட்பிரபுவும் இயக்கி உள்ளார்கள். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரைலர் ஆரம்பிக்கும்போதே காக்டெய்ல் காதல் கதை என்று ஆரம்பிக்கிறது. யங் கெளதம் மேனன், சற்றே மெலிந்து காட்சியளிக்கும் விஜய் சேதுபதி, உனக்கு என்னை பிடிக்குமா ? உன் பொண்டாட்டியை பிடிக்குமா ? என்று மிரட்டல் கேள்வி கேட்கும் அதிதி பாலன், காதலில் உருகும் மேகா ஆகாஷ், சாக்‌ஷி அகர்வால் என அசத்தலாக உள்ளது .