
கர்னூல்:
வெறி நாய்கள் 4 வயது குழந்தையை கடித்து குதறி அரை கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றன. குழந்தையைக் கொன்றது ஆந்திர மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரமாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய தம்பதி வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். தங்கள் 4 வயது மகன் இப்ராகிமை ஒரு மரத்தில் தொட்டிலில் கட்டிவிட்டிருந்தனர்.
சிறிது நேரம் கழித்து பார்க்கும் போது தொட்டிலில் குழந்தையை காணவில்லை. பதறியபடி குழந்தையை தேடிப்பார்த்தனர். அப்போது குழந்தையின் உடல் அரை கிலோமீட்டர் தூரத்தில் கிடந்து.
குழந்தையை கடித்து இழுத்துச் சென்ற நாய்கள் அங்கு குழந்தையின் உடலை வைத்து சண்டையிட்டுக்கொண்டிருந்தன.
நாய்களை விரட்டிய பெற்றோர், குழந்தையை மீட்டனர், ஆனால் குழந்தை இறந்துகிடந்தது.
[youtube-feed feed=1]