வைரலாகும் “குண்டாஸ் குண்டாஸ்” பாடல் ( வீடியோ)

Must read

”“மூடு டாஸ்மாக்கை மூடு” என்ற கோவன் பாடி, ம.க.இ.க. அமைப்பு வெளியிட்ட பாடல் ஏக பிரபலம்.

அது போல தற்போது “குண்டாஸ் குண்டாஸ்.” என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

சமூகஆர்வலர்கள் தொடர்ந்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவது குறித்த பாடல் இது.

இப்பாடல் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

அந்த பாடல் வரிகள்..

குண்டாஸ் குண்டாஸ்
குண்டாஸ் குண்டாஸ்
ஸ்டுடண்டுக்கு குண்டாஸ்
ஊழல் பண்ணி தின்ன காசில
அமைச்சர் வயிறு அண்டாஸ்

பச்சயப்பாஸ் அண்ணாமலை
தட்டிக்கேட்டான் ஸ்டுடன்ட்ஸ் – அவன்
விவசாயிக்கு பொறந்தவன்டா
நீங்களெல்லாம் புரோக்கர்ஸ் – உன்
கேசு கீசு குண்டாசெல்லாம்
நமத்துப்போன பட்டாசு – நீங்க
நடத்துறது சர்க்காரில்லே
ஆளே இல்லா சர்க்கஸ்

ஆத்து மணலை ஆட்டையப்போட்ட
அமைச்சர் தலையில முண்டாசு
ஐ.டி ரெய்டில் சிக்கினவங்க
ஆக்கங்கெட்ட கூவாஸ்
கூவத்தூரு கும்மாளத்தில்
வேட்டிய தூக்கி பிரேக் டான்ஸு
குட்கா விற்க லஞ்சம் வாங்கின
ஐ.பி.எஸ் க்கு போனசு

கதிராமங்கலம் நெடுவாசல்
அக்கா குடுத்திச்சி நோட்டீசு – அரசை
ஆதரிச்சா எழுத முடியும்
மூளை கெட்ட முண்டாஸ்
குண்டாஸுக்கும் அண்டாஸுக்கும்
பந்தோபஸ்து போலீசு
ஓ.பி.எஸ்  இ.பி.எஸ்
பி.ஜே.பி க்கு லெக் பீஸ்

ஆறு கேஸ் வாங்கினாக்கா
ஸ்டூடண்டுக்கே குண்டாஸ் – உங்க
ஆத்தா மேல நூறு கேஸ்
இன்னா…ங்கடா டமாஸ்
சின்னம்மாவை உள்ளே வச்சும்
ஊஹும் ஊஹும் நோ யூஸு
இந்த அக்யூஸ்டெல்லாம் ஒண்ணா சேந்து
நமக்கு போடுது குண்டாஸ்.

More articles

Latest article