பெங்களூரு
பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா மீது வழக்கு பதிய முன்னாள் நீதிபதி குன்ஹா ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபோது கர்நாடகாவில் முதல்வராக எடியூரப்பா பதவி வகித்தார். அப்போது, கொரோனா உபகரணங்களை கொள்முதல் செய்தததில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும், உள்ளூரில் விற்கப்படும் தொகையை விட கூடுதல் தொகை கொடுத்து மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின.
குறிப்பாக சீனாவில் இருந்து கொரோனா வாங்கப்பட்ட உபகரணங்களில் முறைகேடு நடைபெற்றது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு ஆகும்.
கடந்த 2023-ல் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் கொரோனா உபகரணங்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி டி குன்ஹா தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
குன்ஹா ஆணைய விசாரணை ந அறிக்கையில், முன்னாள் முதல்வர்ர் எடியூரப்பா மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமலு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.