சென்னை:  குமரிமுனையில் எழுந்தருளியுள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா  நிகழ்ச்சிகளி,  சென்னையின் 15 இடங்களில் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் நேரடி ஒளிபரப்பு  செய்யப்படுகிறது. அதன் விவரங்களை தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

குமரி முனை விவேகானந்தர் பாறை அருகே உள்ள பாறையில் அமைக்கப்பட்டுள்ள 133 அடி உயரமுடைய   திருவள்ளுவர் சிலை,  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால்,    அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் வெள்ளி விழா இன்று  (30.12.2024) முதல் 01.01.2025 வரை 3 நாட்கள் கொண்டாடப்படவுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில்திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் திறப்பு, வெள்ளிவிழா சிறப்பு மலர் வெளியிடுதல், திருக்குறள் கண்காட்சி தொடங்கி வைத்தல், அய்யன் திருவள்ளுவர் தோரணவாயில் அடிக்கல் நாட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியை எல்.இ.டி. திரைகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி 30.12.2024 அன்று (திங்கட்கிழமை) மாலை 5.00 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சி மற்றும் 31.12.2024 அன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா : சென்னையின் 15 இடங்களில் பொதுமக்களுக்கு நேரடி ஒளிபரப்பு  செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி டி,   15 மண்டலங்களில் இந்த நிகழ்வை கண்டு களிக்கும் வகையில் மாநகராட்சி தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு :

திருவொற்றியூர் – அஜெக்ஸ் பேருந்து நிலையம், சன்னதி தெரு வடிவுடையம்மன் கோயில்

மணலி – மணலி புதுநகர் 10வது பிரதான சாலை, எம்.எம்.டி.ஏ.2வது பிரதான சாலை- மாத்தூர் பூங்கா

மாதவரம் – எம்.ஆர்.எச். சாலை- தட்டாங்குளம் சாலை சந்திப்பு, பரப்பன்குளம் புது பூங்கா

தண்டையார்பேட்டை – தண்டையார்பேட்டை மெட்ரோ – அகஸ்தியா தியேட்டர் அருகில், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை- அம்பேத்கர் கல்லூரி

இராயபுரம் – மின்ட் பேருந்து நிலையம், எழும்பூர் இரயில் நிலையம்

திரு.வி.க.நகர் – கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், திரு.வி.க. நகர்- மேயர் அலுவலகம்,

அம்பத்தூர் -பழைய எம். டி.எச்.சாலை, மங்கள் ஏரி பூங்கா

அண்ணாநகர் – வில்லிவாக்கம் பேருந்து நிலையம், புல்லா அவென்யூ -திரு.வி.க.நகர் பூங்கா

தேனாம்பேட்டை – மெரினா கடற்கரை, வள்ளுவர் கோட்டம் அண்ணா சிலை

கோடம்பாக்கம் – ஜீவா பூங்கா, ஜெய் நகர் பூங்கா

வளசரவாக்கம் -நொளம்பூர் பாரதி சாலை, ஆற்காடு சாலை (உர்பேசர் லாரி நிலையம்)

ஆலந்தூர் – முகலிவாக்கம் வார்டு-156 அலுவலகச் சந்திப்பு, நங்கநல்லூர் 4வது பிரதான சாலை-கோயில் குளம் அருகில்

அடையாறு – பெசன்ட் நகர் கடற்கரை, சென்னை சில்க்ஸ்-கிராண்ட் மால் அருகில்

பெருங்குடி -பாலவாக்கம் கடற்கரை, ஐயப்பன் நகர் பிரதான சாலை- மடிப்பாக்கம் ஏரி

சோழிங்கநல்லூர் – நீலாங்கரை கடற்கரை, செம்மஞ்சேரி, சுனாமி நகர் தமிழ்நாடு நகர்ப்புற

வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பு முதல் பிரதான சாலை பூங்கா