சென்னை:

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், காந்தி பேரவை நிறுவனத் தலைவருமான குமரி அனந்தனுக்கு இன்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்ட அவர் சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.