சென்னை:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநரின் தந்தையுமான குமரி அனந்தன் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கட்சியின் மூத்த தலைவருமானவர் குமரி அனந்தன். அவருக்கு வயது 90. குமரி அனந்தன் சென்னையில் வசித்து வருகிறார். அவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் குழுவினர் குமரி அனந்தனை 24 மணி நேரமும் தொடர்ச்சியாக கண்காணித்து மருந்து மாத்திரைகளை கொடுத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். உடல் நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தை பொறுத்து அவர் வீடு திரும்ப இருக்கிறார் என்று மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.