திருச்சி:

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி வரும் புதன் கிழமை முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த அவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி கும்பிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்-வர் பதவி கொடுப்பது தொடர்பாக இப்போது எதுவும் செய்ய முடியாது. 5 ஆண்டு பதவி காலத்தை காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் பூர்த்தி செய்யும் என்றார்.

இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் காவிரி பிரச்னைக்கு தீர்வு காண்பது நல்லது. 3 ஆண்டுகளாக போதிய மழையில்லாததால் கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அருளால் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து அணைகள் நிரம்பினால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதித்து கர்நாடக அரசு செயல்படும்’’ என்றார்.