டில்லி:
குல்பூஷண்ஜாதவுடன் நடந்த சந்திப்பின்போது அவரது தாயார், மனைவியின் குங்குமம், தாலி, காலணி ஆகியவற்றை அகற்றச் சொல்லி பாகிஸ்தான் அதிகாரிகள் கெடுபிடியாக நடந்து கொண்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் குல்பூஷண் ஜாதவ்(வயது 47). இவர், கட ந்த ஆண்டு மார்ச் மாதம் 3-ம் தேதி ஈரான் நாட்டில் இருந்து பலுசிஸ்தான் மாகாணம் வழியாக பாகிஸ்தானு க்குள் நுழைந்து உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் கைது செய்தது. இவருக்கு வழங்கிய மரணதண்டனையை சர்வதேச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.
இந்நிலையில் குல்பூஷண் ஜாதவ் மனைவி சேத்தன்குல், தாயார் அவந்தி ஆகியோர் அவரை நேரில் சந்திக்க பாகிஸ்தான் அனுமதி வழங்கியது. மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட்ட இந்த அனுமதியை தொடர்ந்து நேற்று இருவரும் பாகிஸ்தான் சென்று குல்பூசணை சந்தித்து பேசிவிட்டு டில்லி திரும்பினர். அங்கு வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்ஜை இருவரும் இன்று சந்தித்து பேசினர்.
குல்பூஷணுடன் நடந்த சந்திப்பின் போது அவரது மனைவியும், தாயாரும் தாலி, வளையல்கள், பொட்டு, காலணிகளை அகற்றும் படி பாகிஸ்தான் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இது பாதுகாப்பு நடவடிக்கை என்று பாகிஸ்தான் கூறினாலும் திரும் வரும் போது ஜாதவ் மனைவியின் காலணிகள் திரும்ப கொடுக்கவில்லை.
ஜாதவ் தாயார் மராத்தியில் தொடர்பு கொள்ள அனுமதிக்கவில்லை. அவர் மராத்தியில் பேசும் போது அதிகாரிகள் தொடர்ந்து குறுக்கிட்டுள்ளனர். பாகிஸ்தான் அளித்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்கி விட்டதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.