கோலாலம்பூர்:
மலேசியா பிரதமராக மகாதிர் முகமது பொறுப்பேற்றுள்ளார். மலேசியா தற்போது 2,500 கோடி டாலர் கடனில் சிக்கி தவிப்பதாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து கோலாலம்பூர்-சிங்கப்பூர் இடையிலான 350 கிலோமீட்டர் தூர புல்லட் ரெயில் திட்டத்தை ரத்து செய்வதாக மகாதிர் இன்று அறிவித்தார். கோலாலம்பூரில் இருந்து சாலை வழியாக 5 மணி நேரத்திலும், விமானம் மூலம் ஒரு மணி நேரத்திலும் சிங்கப்பூர் சென்றடையலாம். புல்லட் ரெயில் மூலம் 90 நிமிடங்களில் சென்றடையும் வகையில் இதற்கு திட்டமிடப்பட்டது.
2026-ம் ஆண்டில் முடிக்கப்பட வேண்டும் என்ற முனைப்பில் ஆயிரத்து 400 கோடி டாலர் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பரிசீலனை நடைபெற்று வந்தது. இந்நிலையில் புல்லட் ரெயில் திட்டத்தை ரத்து செய்து மகாதிர் முகமது உத்தரவிட்டுள்ளார்.