கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் கதவு நேற்று திடீரென திறந்துகொண்டது.
இதையடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுப்படுவதாக கர்நாடக மாநில விவசாயிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் சாலுவராயசாமி, “தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட கேட் திறக்கப்படவில்லை.” தவறுதலாக கேட் திறந்துவிட்டது, அவ்வளவுதான். அதிகாரிகள் சரியான நேரத்தில் செயல்பட்டு அதை விரைவாக சரிசெய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும், அணையின் நீர் 80 அடியை எட்டுவதற்கு முன்பே பராமரிக்கப்படுகிறது” என்றார்.
அணையில் தற்போது 107 அடி தண்ணீர் உள்ளது. மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. பராமரிப்பு பணியின் போது ஒரு கேட் திறந்து விடப்பட்டது. காலை 8 மணிக்கு திறக்கப்பட்ட கேட், மாலை 5 மணிக்குள் தொழில்நுட்பக் குழுவால் மூடப்பட்டது.
இதில் 600 முதல் 700 கனஅடி தண்ணீர் மட்டுமே வெளியேறி இருக்க வாய்ப்பு உள்ளது.
கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் பழமையான அணையின் மதகுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமாரிடம் கோரிக்கை வைத்துள்ளேன், அவர் விரைவில் கே.ஆர்.எஸ் அணையை ஆய்வு செய்ய உள்ளார்” என்று கர்நாடக அமைச்சர் சாலுவராயசாமி தெரிவித்துள்ளார்.