புதுடெல்லி: 
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக நாளை கான்பூர் செல்கிறார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசுத் தலைவர் சவுத்ரி ஹர்மோகன் சிங் யாதவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் நாளை கலந்து கொண்டு உரையாற்றுவார் என்றும், நாளை மறுநாள் ஹர்கோர்ட் பட்லர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சௌத்ரி ஹர்மோகன் சிங் யாதவ் அல்லது ‘சௌத்ரி சாஹாப்’, ஒரு கல்வியாளர், சமூக சேவகர், சுதந்திர ஆர்வலர் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் அரசியல்வாதி.  நாளை மெஹர்பான் சிங் கா பூர்வா பகுதியில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி உரையாற்றுவார்.
ஹார்கோர்ட் பட்லர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (முன்னதாக ஹர்கோர்ட் பட்லர் டெக்னாலஜிகல் இன்ஸ்டிடியூட், கான்பூர் என்று பெயரிடப்பட்டு இருந்தது) 1921 இல் அப்போதைய ஐக்கிய மாகாண அரசாங்கத்தால் இப்பகுதியின் தொழில்நுட்ப கல்வி, பயன்பாட்டு ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்டது. இது ‘HBTI’ என்று பிரபலமாக அறியப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.