காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது. கவுன்சிலர்கள் அனைவரும் தனியார் விடுதியில் சிறை வைக்கப் பட்டதால், நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது யாரும் கலந்துகொள்ள முடியாத நிலையில், தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், மொத்தமுள்ள 51 கவுன்சிலர்களில் யாரும் பங்கேற்காததால் தோல்வியில் முடிந்தது. திமுகவினரின் இந்த நடவடிக்கை, கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கூவத்தூர் சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
காஞ்சிபுரம் மேயராக மகாலட்சுமி பதவி வகித்த சில மாதங்களிலேயே அவருக்கு எதிராக கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே நெல்லை, கோவை மாநக மேயர்மீது திமுகவினரே புகார்கள் கூறிய நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி திமுக மேயர்மீது புகார்கள் எழுந்தன. காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் ஒரு சில திமுக கவுன்சிலர்களும் மேயர் மகாலட்சுமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
இந்த நிலையில், மேயர் தனது பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி 33 கவுன்சிலர்கள் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகனிடம் நம்பிக்கையில்லா தீர்மான மனு அளித்தனர். இதையடுத்து மாநகராட்சி கூட்டம் இன்று ( ஜூலை 29-ம் தேதி) நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்தார். அன்றைய தினம் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் கூறப்பட்டது.
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மேயருக்கு எதிராக உள்ள 22 கவுன்சிலர்களும், ஆதரவாக உள்ள 10 கவுன்சிலர்களை கட்சி தலைமை அங்கிருந்து வெளியேற்றியது. அவர்களை கூவத்தூர் சம்பவம் போல, சொகுசு வாகனங்களில் சுற்றுலா அழைத்துச்சென்று மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதிகளிள்ல சொகுசாக தங்க வைக்கப்பட்டனர். துணைமேயர் குமரகுருபர சாமி தலைமையில் 35 கவுன்சிலர்கள் பேருந்து மற்றும் சொகுசு கார்களில் மாமல்லபுரத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். இது பேசும்பொருளாக மாறியது.
இந்தநிலையில், இன்று மாநகராட்சி மன்றத்தில், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், இன்றைய கூட்டத்தில் மொத்தமுள்ள 51 கவுன்சிலர்களில் திமுக கவுன்சிலர்கள் உள்பட அனைத்து கட்சிகளின் கவுன்சிலர்களும் கலந்துகொள்ளவில்லை. இதனால் தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்தே, 35 கவுன்சிலர்களும் மீண்டும் காஞ்சிபுரம் திரும்பினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக